தமிழ் கலைஞருக்கு இலங்கை அரசினால் அதியுயர் கௌரவம்!
இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்ட சுனாமி திரைப்படத்துக்காக சர்வதேச விருதுவென்ற இலங்கை நடிகையாவார்.
இலங்கை அரசினால் அண்மைக் காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட மேற்படி கௌரவம், ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுவதாக தெரிவித்து துறைசார்ந்தவர்கள் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை