• Breaking News

    பணத்தை மீதப்படுத்த நொதேண் வைத்தியசாலை செய்த இழிவானசெயல் - மக்கள் விசனம்!


     யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால் உள்ள வெற்றுக் காணியில் நொதேண் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு கொழுத்துவதனால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

    பரமேஸ்வராச் சந்தியில் உள்ள நொதேண் வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகளே இப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்படுவதாக மக்கள் செய்த முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

    சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர் ஆதாரங்களைத் திரட்டியதோடு இது தொடர்பில் உடன் வழக்குத் தாக்கல் செய்யப்படும் நொதேண் வைத்தியசாலைக்கு ஏற்கனவே பல தடவை அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் மீண்டும் இவ்வாறான ஒரு செயல் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தனர். 

    இது தொடர்பில் உடனடியாக சுற்றுச் சூழலிற்கு பொறுப்பான பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. 

    இது தொடர்பில் அயலில் உள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில் பணம் செலுத்தி கீற்றரில் எரிப்பதற்கான பணத்தை மீதப்படுத்தும் நோக்கில் நொதேன் வைத்தியசாலை செய்த இழி செயலினால் சுற்றுப் புறத்தில் வாழும் நாம் நோயால் பாதிப்படைவதனை எவரும் கண்டுகொள்ளவில்லை.

    சில சமயம் நாம் நோய்வாய்ப்பட்டால்தான் தமக்கு வருமானம் என எண்ணுகின்றனரோ தெரியவில்லை என்றனர்.









    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad