• Breaking News

    இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!

     மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    சம்பவத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரட்னகுமார் டினேஷ்ராஜ் (வயது 29) எனும் இளம் குடும்பஸ்தர், உயிரிழந்துள்ளார்.

    மேசன் தொழிலாளியான இவர், தனது உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் ரயில் பாதையைக் கடக்கும் போது, ரயிலில் மோதி உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

    இதனையடுத்து திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டார். மேலும் உயிரிழந்தவரின் குடும்ப உறவினர்களிடம் ஏறாவூர்ப் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad