யாழில் களைகட்டியது சவுக்கு தடி விற்பனை...!
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பெருவிழா நாளையதினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது.
இந்நிலையில் சவுக்கு மர தடிகளின் விற்பனை யாழ்ப்பாணத்தில் இன்று களைகட்டியது.
யாழ்ப்பாண நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சவுக்கு மரத் தடிகளின் விற்பனை நடைபெற்றதுடன் அதனை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தங்களது வீடுகளில் பாலன் குடில் அமைத்து சவுக்கு மரங்களால் அலங்கரிப்பது வழமையாகும்.
கருத்துகள் இல்லை