• Breaking News

    அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்தது என்ன? தண்டனை கிடைக்குமா? நாமல் ஆவேசம்

     அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை பயமுறுத்தும் வகையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

    நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளின் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று நாமல் உள்ளிட்ட குழுவினர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வந்திருந்தார்.

    இவரிடம் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் நாமல்,

    ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் பிரதமரும் ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நியாயமான விசாரணை நடத்த அறிவுறுத்தினர்.

    அந்த விசாரணைகளை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் வரை ரொஹான் ரத்வத்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

    யாருடைய பாதுகாப்புக்கும் இடையூறு விளைவிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் ஆவேசமாக குறிப்பிட்டார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad