• Breaking News

    மீனவனுக்கு மறுவாழ்வளித்த வைத்திய நிபுணர் இளஞ்செழிய பல்லவன்

     கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி சிதைவடைந்த மீனவரது கை மற்றும் காலினை, சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சகிச்சை நிபுணர் வைத்தியர் இளம் செழிய பல்லவன் இணைத்துள்ளார்.

    பருத்தித்துறையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மன்னாரைச் சேர்ந்த மீனவன் தவறுதலாக கடலில் விழுந்த நிலையில் அவரது வலது கை, வலது கால் வள்ளத்தின் காற்றாடியில் சிக்குண்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிதைந்தது.

    இன் நிலையில் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணர் இளம் செழிய பல்லவன் தலைமையிலான குழுவினர் அதனை வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் இணைத்துள்ளார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad