• Breaking News

    இந்த அரசாங்கம் பாசிச ஆட்சியை நோக்கி நகர்கின்றதா? சபா குகதாஸ் கேள்வி

     இந்த அரசாங்கம் பாசிச ஆட்சியை நோக்கி நகர்கின்றதா என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த அவர்கள் மிரட்டியமை தொடர்பாக இன்று (2021.09.15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

    நேற்றைய தினம் 14ஆம் திகதி, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த அவர்கள் அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்துவிடுவேன் என துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

    அவர் அரசியல் கைதிகளுடன் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே இந்த அரசாங்கம் ஒரு பாசிச ஆட்சியை நோக்கி அல்லது ஜனநாயக மக்களுடைய வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அடக்கி ஆளும் சர்வதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது போல் உள்ளது.

    அந்த வகையில் கடந்த மாதம் 13ஆம் திகதி மனித உரிமை பேரவையில் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவர்களினால் இலங்கையில் நடைபெறுகின்ற சட்ட மீறல்கள் தொடர்பாக பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நிரூபிக்கும் முகமாக, நேற்றைய தினம் சிறைச்சாலையில் அந்த ராஜாங்க அமைச்சர் அவர்கள் நடந்து கொண்டமை அப்பட்டமாக தெரிகின்றது.

    கிட்டத்தட்ட இருபது முப்பது வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாமல், மிக மோசமான குற்றச்சாட்டுகளான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அந்த ராஜாங்க அமைச்சர் முழங்காலில் மண்டியிட வைத்து அவர்களது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அறியமுடிகின்றது. இத்தனைக்கும் அவர் மது போதையில் இருந்ததாக சிறைச்சாலையில் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

    உண்மையில் ஒரு இராஜாங்க அமைச்சர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஆயுதத்துடன் சிறைக்குள் செல்வது என்பது மிக அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறல் ஆகவே கருதப்படுகின்றது.

    அதுமட்டுமல்ல சிறையில் இருக்கும் கைதிகளை ஆதி ஆயுதமுனையில் மிரட்டுவது கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை முழங்காலிட வைப்பது எல்லாம் ஒரு மனித உரிமை மீறல். நாங்கள் இதனை சிறையில் இருக்கும் அத்தனை கைதிகளுக்கும் எடுக்கப்பட்டு இருக்கின்ற ஒரு கொலை அச்சுறுத்தலாகவே பார்க்கின்றோம்.

    உண்மையிலேயே இந்த அரசாங்கம் ஜனநாயக ர முறையிலான சட்ட ரீதியான ஆட்சியை முன்னெடுக்கின்றது என்பதனை உறுதிப்படுத்த வேண்டுமேயானால், இந்த செயற்பாட்டினை மேற்கொண்ட அந்த இராஜாங்க அமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad