யாழில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்- உடனடியாக விரைந்த பொலிஸார்!
யாழ்ப்பாணம் நெல்லியடியில் இரு கோஷ்டிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி இராஜகிராமத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு இரு கோஷ்டிகளுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மோதலுடன் சம்மந்தப்பட்ட சந்தேகத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்துவிட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர். கொரோனா அபாயம் காரணமாகவே பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை