வர்த்தக கண்காட்சியில் குண்டுவெடிப்பு! - 10 பேர் காயம்...!
கேமரூன் நாட்டில் வர்த்தக கண்காட்சி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், கேமரூன் நாட்டின் தென்மேற்கே ஆங்லோபோன் பகுதியின் பியூவா என்ற இடத்தில் வர்த்தக கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. கூட்டம் அதிகம் இருந்த அந்தப் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனினும், சிலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு, சமூக ஊடகம் வழியே பிரிவினைவாத போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை