• Breaking News

    இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

     


    இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறான தரப்பினர் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறுவர்களை ஆடையகங்களுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அத்தியாவசிய தேவைகளுக்கு அத்தியாவசிய நபர் மாத்திரம் வெளியே செல்லுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

    பொது மக்கள் ஒன்றுக்கூடுவதனை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். திருமணங்கள், விருந்துகள், வைபவங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு சென்ற ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad