• Breaking News

    திருவெம்பாவையை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகாசபையால் பாதயாத்திரை முன்னெடுப்பு...!

     


    திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று (18) காலை முன்னெடுக்கப்பட்டது.

    குறிப்பாக ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு அகில இலங்கை சைவ மகா சபை பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சிவனடியார்களை மட்டும் உள்ளடக்கியவாறு இம்முறை சுகாதார வழிகாட்டுதல்களுடன் இடம்பெற்றது.

    இன்று காலை 5 மணியளவில்  மாதகல் சம்பில்துறை சம்புநாத  ஈஸ்வரத்தில் ஆரம்பமாகிய இப் பாதயாத்திரை சிவனுடைய பாடல்களையும் தேவார பதிகங்களையும் உச்சரித்தவாறு  பனிப்புலம், சுழிபுரம் பகுதிகளிலுள்ள ஆலயங்களை தரிசித்த வண்ணம் பொன்னாலை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இராவணேஸ்வரம் தலத்தில் நிறைவடைந்து 

    மேலும் இப்பாதை யாத்திரையின் போது சுழிபுரம் மேற்கு ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயத்தில் அகில இலங்கை சைவ மகாசபையால் அச்சிடப்பட்ட நாள் காட்டி வெளியீடும் அதனைத்தொடர்ந்து பிடியரிசித்திட்டமும்  அறிமுகப்படுத்தப்பட்டது.

    குறிப்பாக அறநெறி மாணவர்களிடம் பொதிப்பை ஒன்று வழங்கப்பட்டு அவர்களின் இல்லங்களில் உணவுத்தயாரிப்பின் போது ஒரு பிடி அரிசியை இட்டு அதனை நிரப்பி எதிர்வரும்  தைப்பூசதினத்தில் அவை சேகரிக்கப்பட்டு ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்தளிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டது .

    இவ் பாதயாத்திரையில் அகில இலங்கை சைவ மகாசபையின்  பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார், அகில இலங்கை சைவ மகாசபையின் பொருளாளர் அருள் சிவானந்தன், இலங்கை சித்தர் பீட  நிறுவுனரும் குருமுதல்வருமான நவனீத சித்தர் மற்றும் சிவனடியார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad