• Breaking News

    மூளாயில் குடிநீர் வழங்கலுக்கான அடிக்கல் நாட்டலும் மரம் நடுகை நிகழ்வும்

     


    மூளாய் ஜே/171 கிராம சேவகர் பிரிவில் இன்றையதினம் "செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

    யாழ். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களது தெரிவில் சுமார் 4 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் இந்த திட்டமானது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து "பசுமை பெருமை தேசிய திட்டம்" என்னும் தலைப்பில் பயன்தரும் மரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    கிராமத்தினை அழகு படுத்துவதற்கும் வீட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நாட்டப்படும் திட்டத்தின் மூலம் இந்த மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. இத்திட்டமானது தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி பிரசாந்த் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நீர் வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.திலகரத்ன, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் யாழ். , கிளிநொச்சி திட்ட பணிப்பாளர் தி.பாரதிதாசன் மற்றும் சங்கானை பிரதேச செயலர் பொ.பிரேமினி ஆகியோர் கலந்துகொண்டனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad