புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கிறாரா மகிந்தவின் புதல்வர்???
இலங்கையில் தற்போதைய சமையல் எரிவாயு நிறுவனங்களுடன் மேலும் எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நிறுவனத்தை சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் யோஷித கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் மிகப் பெரிய எரிவாயு நிறுவனத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியை மறுப்பதாக யோஷித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லாஃப் கேஸ் நிறுவனத்தை சிரமங்களுக்கு உட்படுத்தி விட்டு, புதிய எரிவாயு நிறுவனம் ஒன்றை யோஷித்த ராஜபக்ச ஆரம்பிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை நஷ்டப்படுத்தவோ அல்லது புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கவோ தனக்கு எவ்வித அத்தியவசியமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை