• Breaking News

    யாழ். - சங்கானையில் சுதேச சித்த மருத்துவ முகாம்...!

     


    யாழ். இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்கம் இணைந்து நடாத்தும் சித்த மருத்துவ முகாம், இன்று காலை  9.30 மணியளவில் சங்கானை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்த மருத்துவம்" எனும் தொனிப்பொருளில் குறித்த மருத்துவ முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

    இதன்போது நோயாளிகளுக்கான இரத்த பரிசோதனை, மருந்துகள் வழங்கல் உள்ளிட்ட பல இதர சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் சிறீமான் நடராஜ் ஜெய் பாஸ்கர், வைத்திய கலாநிதி ஜெபநாம கணேசன், வடமாகாண சித்த மருத்துவ திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சுதேச  அமைச்சின் செயலாளர், வலி. மேற்கு பிரதேசசபை தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், உப பிரதேச செயலாளர் திருமதி செந்தூரன், சித்த வைத்திய அதிகாரகள், கிராம அலுவலர்கள், சித்த வைத்திய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad