மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட போர் விமானம்...!
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, சேவையில் இருந்து நீக்கப்பட்ட Mig-27 போர் விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் (UOM) சிரேஷ்ட பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தனவிடம் நேற்றுமுன்தினம்(20) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இயந்திர பொறியியல் துறை மாணவர்கள் விமானப் பாடநெறிகளில் நடைமுறை அறிவைப் பெறுவதற்கு இந்த விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இயந்திர பொறியியல் பீடத்தின் விமானப்படை பொறியியல் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை