இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது - ஐவர் பலி...!
தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் NDTV செய்தி வௌியிட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mi-17V5 ரக ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
தமிழகத்தின் குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
உடனடியாக அந்த பகுதிக்கு மீட்புப் படையினருடன் விரைந்த குன்னூர் இராணுவ முகாம் அதிகாரிகள் எரிந்த நிலையில் இரண்டு உடல்களை மீட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை