• Breaking News

    நாடு முழுவதும் "டும் டும்" சத்தம் - கோப்பாயிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு...!


    நேற்றிரவு இருபாலை பகுதியில் காஸ் அடுப்பு வெடித்துள்ளது.

    கோப்பாய் தெற்கு - இருபாலையில்  உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது  அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று அயலவரை அழைத்துள்ளார்.

    இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற அயலவர்கள் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.

    அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையிலேயே கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad