• Breaking News

    "புத்திகெட்ட மனிதர் எல்லாம்" திரைப்பட முன்னோட்டம் வெளியீடு...

     


    "புத்திகெட்ட மனிதர் எல்லாம்" என்கிற முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.


    இதன்போது படக்குழுவினர்,படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவங்கள் திரைப்படம் தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

    பிளக்போர்ட் இன்டர்நேஷனல் வழங்கும் "புத்திகெட்ட மனிதர் எல்லாம்" திரைப்படம் டிசம்பர் 24,25,26ம் திகதிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

    ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையில் உள்நாட்டுக் கலைஞர்கள் பலரின் பங்கேற்பில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad