பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு...!
யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமராட்சி துன்னாலை பகுதியிலும் இன்று எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை