மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் தலைமறைவு - பொலிஸார் வலைவீச்சு...!
வேயாங்கொடயில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கிய பாடசாலை ஆசிரியரை பொலிஸார் வலைவீசி தேடுதல் செய்து வருகின்றனர்.
பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் மாணவனை எஸ்லோன் குழாயில் கொடூரமாக தாக்கிய ஆசிரியரே பொலிஸாரால் தேடப்படுகிறார்.
நிட்டம்புவ, ஹம்புட்டியாவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக, வெயங்கொட பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சன்ன வெத்தே தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் 13ஆம் வகுப்பில் கல்வி கற்கும் வேயங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அந்த மாணவன் கடந்த 10ஆம் திகதி கல்வி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என கூறி சந்தேக நபரான ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
மாணவனுக்கு எஸ்லோன் குழாயினால் தாக்குதல் மேற்கொண்டமையினால் அவர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கருத்துகள் இல்லை