அராலியில் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது...!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது.
கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும் 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் இன்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரின் இரண்டு குழுக்கள் குறித்த வீட்டிற்கு சென்று அடுப்பினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியதாகவும் எனினும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என சம்பவம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை