வட்டுக்கோட்டையில் இரு வேறு வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையர்கள் கைவரிசை...!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, செட்டியார் மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாண கல்லூரியின் பின் வீதி பகுதிகளில் வைத்து இருவரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் கைப்பைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இருவரும் வீதியால் சென்று கொண்டிருந்தவேளை முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய கைப்பைகளே இவ்வாறு கொள்ளையடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரிடமும் கைப்பைகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் ஒரேதரப்பைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை