• Breaking News

    துளிகூட வலியே இல்லாமல் தற்கொலை செய்யக்கூடிய இயந்திரம் சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பு...!

     தற்கொலை செய்துகொள்வதற்கு என சுவிட்சர்லாந்தில் இயந்திரம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு அனுமதி அளித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    சுவிட்சர்லாந்தில், Exit International என்ற நிறுவனமானது, Sarco என்ற அழைக்கப்படும் இயந்திரமான 3D Printed Capsule என்ற தற்கொலை இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்திற்கு சுவிட் அரசு சட்டப்பூர்வமான அனுமதியை வழங்கி இருக்கிறது.

    மேலும் இந்த இயந்திரமானது செயல்படும் முறை அமைதியான மரணத்திற்கு செல்ல இவை வழிவகுக்கிறது. இந்த சாதனமானது, சுவிட்சர்லாந்தில் முக்கிய இடத்தைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து செல்லமுடியுமாம். இறக்க நினைக்கும் நபர் இந்த இயந்திரத்தில் ஏறி வசதியாக படுத்துக்கொள்ள, அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் பதிலளித்தவுடன், ஒரு பொத்தானை அமுக்க வேண்டும்.

    பின்னர், அந்த இயந்திரத்தில் நைட்ரஜன் நிரப்பபட்டு, ஆக்ஸிஜன் அளவு 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக மாறி 30 வினாடிகளில் இறந்துவிடுவார்கள்.

    அவர்கள் இறக்கும் முன்பு எந்தவித பீதியும் அச்சமும் இல்லாமல், ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை நிகழ்த்துகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad