யாழில் துருப்பிடித்த மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு...!
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பூவன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த காணி உரிமையாளர் காணியை சுத்தம் செய்து கொண்டிருந்தவேளை துருப்பிடித்த நிலையில் குறித்த குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறையிடப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் அந்த மோட்டார் குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை