• Breaking News

    இலங்கையின் தனியார் பேரூந்து பயணங்களில் புதிய மாற்றம்...!

     இலங்கையின் பயணிகள் போக்குவரத்தை ஸ்திரப்படுத்தப்படுத்தும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் சுமார் 50 பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் உதவியளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தனியார் பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கெமுனு விஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த பேரூந்துகளை இலங்கைக்கு எடுத்து வர சீனாவின் நிறுவனம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குறைந்த தரையமைப்பை கொண்ட இந்த பேரூந்துகள் பயணிகளுக்கு பயணம் செய்ய இலகுவானவை என்று கெமுன விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

    முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் கிராம மட்டங்களிலும் இந்த பேரூந்துகளை பயன்படுத்தமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad