க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மாணவன் மரணம்...!
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை அதிகாரி தனபால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் எத்திமலை பிரதேசத்தை சேர்ந்த மதுக்க லக்மால் என்ற மாணவனராகும். அவர் இம்முறை நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முகம் கொடுக்க தயாராகி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எலிக்காய்ச்ல் ஏற்பட்டு கடந்த 14 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை