வட மாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை கைதடியில்...!
வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர் வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கைதடியில் இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலமையில் இந்த ஏறபாட்டினை ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.
இக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதனால் பெரும் எதிர் பார்ப்பு நிலவுகின்றது. இந்தக் கூட்டம் 10 ஆம்திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு, நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு காரணமாக பிற்போடப்பட்டது.
கருத்துகள் இல்லை