பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டவரின் சடலம் இலங்கைக்கு - வெளிவந்தது அறிக்கை...!
பாகிஸ்தானின் சியால் கோட்டில் இலங்கையர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2021 டிசம்பர் 03ஆம் திகதி பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவதனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் 2021 டிசம்பர் 06ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது அடுத்த நிலை உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். வெளிநாட்டு அமைச்சு இந்த விடயத்தை ஒருங்கிணைத்து வருகின்றது.
தியவதனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.
கருத்துகள் இல்லை