சுமந்திரனுக்கு அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்...!
தன்மீது பொய்யான தகவலை தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்துள்ளார்.
வடக்கில் தொழிலில் ஈடுபடும் 500 இழுவை வலை படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாக பெறுவதாக சுமந்திரன் எம்.பி. தனது சிறப்புரிமையை பயன்படுத்தி சபையில் கூறியுள்ளார், அவர் முடியுமானால் இந்தக் கருத்தை பொதுவெளியில் ஊடகங்களுக்கு சொல்ல முடியுமாவென கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு (07.12.2021) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விவாத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்தா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ''முண்டாட்சி''அதாவது தாங்கள் முண்டுகொடுத்து கொண்டுவந்த ஆட்சியில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இழுவை வலைத் தொழில் தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகள் தொடர்பான சட்டம் போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அவை அமுல்ப்படுத்தப்படவில்லை எனவும், நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளுர் இழுவை வலைப் படகுகள் தொழிலில் ஈடுபடுவதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தொழிலில் ஈடுபடும் 500 படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாக பெறுவதாகவும் அதனால் தான் அது அனுமதிக்கப்படுவதாகவும் சுமந்திரன் எம்.பி தனது சிறப்புரிமையை பயன் படுத்தி இந்த சபையில் கூறியிருந்தார். இதற்கு அந்த கிராமத்து மக்கள் சுமந்திரனுக்கு தகுந்த பாடத்தை படிப்பித்திருந்தார்கள்.
அந்த கிராமத்தில் ஹர்த்தால் நடத்தி சுமந்திரனின் உருவ பொம்மையையும் எரித்து தங்கள்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். நாடாளுமன்றத்தில் எதனையும் வாந்தி எடுக்கலாமென சிலர் நினைக்கின்றனர். பொதுவெளியில் நாளை அவர் இந்த கருத்தை ஊடகங்களுக்கு முன்வைப்பாரா என நான் வெளிப்படையாக அவரிடம் கேட்கின்றேன். அப்படி சொல்வாரா இருந்தால் நான் நீதிமன்றத்தின் மூலம் அது தொடர்பான உண்மையை நிரூபிக்க முடியும் என்றார்.
கருத்துகள் இல்லை