இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் நோயாளர் தொடர்பில் வெளியான தகவல்...
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் நோயாளர் நைஜீரியா நாட்டிலிருந்து வருகை தந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் எந்தவொரு கோவிட் தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லையென உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியா் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரொன் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இன்றைய தினம் இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை