சங்கானையில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு...!
சங்கானை பிரதேசத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (08) சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
சங்கானை பிரதேச செயலர் திருமதி பொ. பிரேமினி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், சங்கானை பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சிவனேசன், இதம் நிறுவனத்தின் பணிப்பாளர், அந் நிறுவனத்தின் தலைவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை