கிளிநொச்சி பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் யாருடையது...?
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எச்சங்கள், ஆயுத தளபாடங்களை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் பார்வையிட்டுள்ளார்.
குறித்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்களை இன்று (14) நீதவான் பார்வையிட்டுள்ளார்.
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
குறித்த பொருட்கள் தொடர்பில் பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை