• Breaking News

    பல ஆண்டுகளுக்குப் பின் தோன்றும் வால் நட்சத்திரம்! இலங்கையரும் பார்க்க முடியுமா???

     பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால் நட்சத்திரத்தை நாளை அவாதானிக்க முடியும் என அமெரிக்காவின் வானியல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    குறித்த நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி-2021-ஏ- (C-2021-A) ஒன்று என அறியப்படும் இந்த வால் நட்சத்திரத்திற்கு அமெரிக்க வானியலாளர் கிரெக் லியோனார்டின் நினைவாக லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    குறித்த நட்சத்திரம் நாளை காலை கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் தென்படும்.

    அத்துடன், உலகின் ஏனைய நாடுகளுக்கு நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வால் நட்சத்திரம் மீண்டும் தென்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் வால் நட்சத்திரமானது இலங்கையில் தோன்றாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad