30 ஆயிரம் மில்லிமீட்டர் கசிப்புடன் பொன்னாலையில் பெண்ணொருவர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்குப் பகுதியில் 30 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 35 வயதுடைய பெண்ணொருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களான சிவமயூரன் மற்றும் யோமல் பண்டார ஆகியோரது விசேட சுற்றிவளைப்பில் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் உட்பட ஐவர் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்தனர். இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றவேளை, ஏனைய நால்வரும் தப்பிச் சென்ற நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூவாயிரம் மில்லிமீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை