• Breaking News

    ஒரு நபருக்காக இரு பெண்கள் ஒரே நாளில் தூக்கிக்கிட்ட சம்பவம் - ஒருவர் மரணம்!

     


    40 வயதான ஒருவரை காதலித்து மணந்த இரண்டு பெண்கள் ஒரே நாளில் கழுத்தில் சுருக்கிட்டு கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் தீவிர சிகிச்சை பிரிவில் மரணத்திற்கும் வாழ்வுக்கும் இடையில் போராடி வரும் செய்தி, களுபோவில வைத்தியசாலையில் நடத்திய மரண விசாரணையின் போது தெரியவந்ததாக பிலியந்தலை திடீர் மரண விசாரணையாளர் அஜித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


    சம்பவம் 60 வயதான பெண் உயிரிழந்துள்ளார். 32 வயதான பெண் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த பெண்கள்.


    உயிரிழந்த பெண்ணின் கணவன் 15 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதுடன் சில மாதங்களுக்கு பின்னர் 25 வயதான இளைஞனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.


    அந்த இளைஞனை தன்வசப்படுத்திக்கொள்வதற்காக ஆடம்பர வீடு உள்ளிட்ட சொத்துக்களை இளைஞனின் பெயரில் எழுதி வைத்துள்ளார். இதன் காரணமாக அப்போது இளைஞனாக இருந்த 40 வயதான நபர், அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.


    இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர், குறித்த நபர் பிலியந்தலை பிரதேசத்திலேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து 60 வயதான பெண், 32 வயதான பெண்ணை தேடி அவரது வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளதுடன் தகவல் உறுதியாகியுள்ளது.


    இதன் பின்னர்  தனது வீட்டுக்கு சென்ற பெண், வீட்டில் பணிப்புரிந்த பெண்ணை கடைக்கு அனுப்பி விட்டு, வீட்டில் ஒரு அறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக திடீர் மரண விசாரணையாளர் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


    பெண் இறந்த இடத்தில் 40 வயதான நபருக்கு எழுதிய பல பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது.


    இந்த நிலையில் தான் திருமணம் செய்துக்கொண்ட நபர், பல வருடங்களாக 60 வயதான பெண்ணுடன் குடும்ப நடத்தியவர் என்பதை அறிந்து கொண்ட 32 வயதான பெண், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது அவர் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக்கொண்டிருப்பதாகவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


    அத்துடன் தெரிந்தே தவறு செய்து, வாழ்க்கையுடன் விளையாடியுள்ளதாகவும் இதற்கு சட்டத்தில் தண்டனை கிடைக்கா விட்டாலும் மன சாட்சியின் தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பதை தவிர்க்க முடியாது என அந்த பெண், 40 வயதான நபரிடம் கூறியதாகவும் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad