• Breaking News

    நாட்டின் சுதந்திர தினத்தில் ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவு!


    மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனுக்கு மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் தடை உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    இன்றைய சுதந்திர தின நிகழ்வின் போது சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கல்லடி பாலம் முதல் காந்தி பூங்கா வரை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

    நாட்டின் நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சிறிலங்காவின் 74-வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் போவதாகவும் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்காகவே குறித்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சுதந்திர தினம் கொண்டாடும் சிறிலங்கா அரசு, ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாகும் ஒரு செயற்பாடாகவே ஊடகவியலாளர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


    இலங்கையில் ஊடக சுகந்திரம் பாதுகாக்கப்படுகின்றது, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றார்கள் என உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசாங்கம்,  இவ்வாறான தடை உத்தரவின் மூலம் உலக நாடுகளுக்கு இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை என்பதை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.

    கடந்த காலங்களில் கருப்பு ஜனவரி தினங்களில் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள்  அரசால் இலக்கு வைக்கப்பட்டு நீதிமன்றங்களில் தடையுத்தரவு பெற்று ஊடக அடக்குமுறையை மேற்க்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad