• Breaking News

    நீரில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவிகள் பலி!

     


    குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது.

    உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில் நான்கு மாணவிகள் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். நால்வரும் நீரில் மூழ்கிய போது, பிரதேசவாசிகளால் அவர்கள் மீட்கப்பட்டனர்.

    பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த மூன்று மாணவிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் தொடர்பில் குருணாகல் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad