ரூபா 60 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
818 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நெல்லியடி நகரம், பருத்தித்துறை வீதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தெக நபர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 6 மில்லியன் (60 இலட்சம்) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை