யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலை தூக்கும் மலேரியா காய்ச்சல்!
யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் மலேரியா தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் நான்கு வாரங்களில் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த 6 மலேரியா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மக்கள் இது தொடர்பில் உடனடி கவனம் எடுத்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை