யாழுக்கு வருகை தரவுள்ள கொழும்பு மாநகர முதல்வர்!
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் அவரது குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இந்த சுற்றுப்பயணம் இடம்பெறவுள்ளது. இதன்போது மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியில் இடம்பெறவுள்ளது.
யாழ். மாநகரசபை மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபை ஆகிய இடங்களுக்கு வருகைதரும் முதல்வருடன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்கிய 70 பேர் கொண்ட குழு கலந்துகொள்ள உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை