டுபாயில் நடைபெறவுள்ள உலககிண்ண கிக்பொக்சிங் கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகளை கௌரவித்தார் சிறீதரன் எம்.பி!
டுபாய் நாட்டில் நடைபெற இருக்கின்ற உலககிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்கு தெரிவாகிய 14 வீர, வீராங்கனைகளுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கெளரவிப்பு வழங்கியிருந்தார்.
எதிர்வரும் 25.02.2022 ஆம் திகதி தொடக்கம் 01.03.2022 ஆம் திகதி வரை டுபாய் நாட்டில் நடைபெற இருக்கின்ற உலககிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டிக்கு வடமாகாணத்தினை பிரதிபலித்து 14 வீர, வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
குறித்த வீரர்கள் தொடர்ச்சியாக பல தேசிய, சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபெற்றி பல தங்கப்பதக்கங்களை ஈட்டித்தந்தவர்கள்.
இவர்கள் இவ் சர்வதேச போட்டியில் கலந்துகொண்டு போட்டியிட்டு வெற்றிபெற வாழ்த்தியும் இவர்கள் உலக கிண்ண போட்டியில் சாதிக்க வேண்டும் என்றும் அவர் பாராட்டியிருந்தார். மேலும் அவர்களுக்கான நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை