தென்னிலங்கையில் பரபரப்பு - வீட்டுக்குள் புகுந்த கும்பலால் பெண் ஒருவர் சுட்டுக் கொலை!
தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் திடீரென புகுந்த நபர்கள் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்துகம பாலிகா வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த கும்பலின் துப்பாக்கி சூட்டினால் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 9 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 37 வயதான தில்ஷானி பெரேரா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது உயிரிழந்த பெண்ணின் கணவர் தனது குழந்தைகளுடன் அறையொன்றிற்குள் புகுந்து கதவை மூடியிருந்ததுடன், துப்பாக்கிதாரிகள் அறையின் கதவிலும் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், வீட்டின் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மத்துகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை