• Breaking News

    ரயிலுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு - மாவிட்டபுரத்தில் சம்பவம்!

     


    இன்று (26) மதியம் மாவிட்டபுரத்தில் உள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    குறித்த நபர் புகையிரதக் கடவையை கடந்து வீதியால் பயணிக்க முற்பட்டவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    சம்பவத்தில் சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

    காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad