• Breaking News

    பயங்கரவாதச் சட்டம் தொடர்பில் கோட்டாபய கொடுத்துள்ள ஆலோசனை

     


    பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புள்ளது என்றால் மாத்திரமே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

    வெளிவிவகார அமைச்சில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற பிரதேச சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை, குற்றவியல் வழக்கு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து விலகிக்கொள்வதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை குறுக்கு வழியில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அரச தலைவர் கூறியுள்ளார்.

    பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அரசாங்கம் தெளிவாக ஆலோசனை வழங்கியுள்ளது எனக் கூறியுள்ள அமைச்சர் பீரிஸ், “நடக்கின்றதா இல்லையா என்பதை அறிய நாம் சந்தர்ப்பத்தை வழங்கி பார்ப்போம்” குறிப்பிட்டுள்ளார்.

    இதன் போது, காவல்துறை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக சிவில் அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad