யாழ். இணுவில் காரைக்கால் சிவன் கோயிலில் மக்கள் நாக பாம்புகளை விடுவதால் வனஜீவராசிகள் திணைக்களத்தினை நாடினர் பிரதேச சபையினர்
யாழ். இணுவில் காரைக்கால் சிவன் கோயிலை அண்மித்த பகுதியில் சமய நம்பிக்கையினால் மக்கள் நாகப்பாம்புகளை அங்கு கொண்டுவந்து விடுவதால் கோயிலைச் சூழவுள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினரான சி.கௌசல்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புராதன ஆலயமாக இணுவில் காரைக்கால் சிவன் கோயில் விளங்குகின்றது.
மக்கள் மத்தியில் நாக வழிபாட்டு முறை காணப்படுகின்றமையால் நாக பாம்பை அடித்துக் கொள்வதற்கு தயங்கும் மக்கள், வீடுகளுக்கும் வயல்களுக்கும் வரும் நாக பாம்புகளை உயிருடன் பிடித்து வந்து குறித்த ஆலய வளாகத்தில் விடுகின்றனர்.
இதனால் அக்கோயிலின் அருகே வசிக்கும் மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்விடயமானது பிரதேச சபை ஊடாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை