• Breaking News

    தேசத்தின் குரலில் அன்ரன் பாலசிங்கம் அவர்களது மரணம் தமிழரின் ஈடு செய்ய முடியாத இராஜதந்திர இடைவெளி - சபா குகதாஸ் தெரிவிப்பு...!

     


    தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆண்டு நினைவேந்தல் 14/12/2021 ஆகும். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். காரணம் அன்றைய காலத்தில் உலக நாடுகளில் இருந்த இராஜ தந்திரிகளுடன் துணிவுடனும்  தந்திரோபாயத்துடனும் உறுதியாகவும் பேசக் கூடிய ஒருவராக தமிழர்கள் தரப்பில் விளங்கினார் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.


    அவரது ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,


    அன்ரன் பாலசிங்கம் அவர்களது திறமையை பேச்சுவார்த்தை மேசையில் எதிர்த் தரப்பினரே வியந்து பார்த்த சந்தர்ப்பங்கள் உண்டு.  உண்மையாக பாலசிங்கம் அவர்களின் மரணம் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின்  தோல்வியில் வெளிநாட்டு நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.


    அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மரணத்தின் பின்னர் தமிழர் தரப்பில் இன்றுவரை இராஜதந்திர இடைவெளி வறிதாகவே தொடர்கிறது.  ஈடு செய்ய முடியாதா நிலை காணப்படுகிறது .


     அர்ப்பணிப்பும் தீர்க்கமாக முடிவுகளை பூகோள இராஐதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப எடுக்கும் வல்லமை கொண்டவராக  இலங்கை ஆட்சியாளரின் சோரம் போகாத எந்த சக்திகளுக்கும் விலைபோகாத இனப் பற்றாளனாக தன்னை தியாகம் செய்தவர் தேசத்தின் குரல் .

    அந்த வகையில் தமிழர் தேசத்தின் குரலாக ஒலிப்பதற்கு பாலசிங்கத்தின் மரணத்திற்கு பின்னர் தமிழர்கள் தரப்பில் சிறந்த இராஜதந்திரி இல்லை என்ற வேதனையை அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாளில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.


    ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல இன்று சில சின்னத்தனமா அரசியல்வாதிகள் அன்ரன் பாலசிங்கத்தை ஓப்பீடு செய்து பேசுவதும் இனத்தின் அடிப்படை வரலாறு தெரியாத தரகர்களை இராஜதந்திரிகள் என்று கத்தும் ஊழையும் தான் பெரும் அவலமாக தொடர்கிறது - என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad