• Breaking News

    பேருந்தில் தவறவிட்ட தங்க நகை - சாரதியின் நேர்மையான செயல்...!

     


    தனியார் பேருந்து ஒன்றில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்த பேருந்து சாரதியின் நேர்மையான நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

    வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட பேருந்து ஒன்றில் நேற்றைய தினம் (13) பயணம் மேற்கொண்ட கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்கும்போது தவறுதலாக தனது கைப்பை ஒன்றினை பேருந்தில் தவறவிட்டு இறங்கியுள்ளார்.


    அதனை பார்வையிட்ட தனியார் பேருந்தின் சாரதியும், உரிமையாளருமான கே.ஜீவானந்தபவனினால் பேருந்தில் கைவிடப்பட்ட குறித்த கைப்பை வவுனியா மாவட்ட பேருந்து சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது .

    கைப்பையில் காணப்பட்ட அடையாள அட்டை ஆவணத்தின் முகவரிக்கு குறித்த உரிமையாளருடன் தொடர்புகொண்டு அவர் பேருந்தில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளர் ஊடாக உறுதிப்படுத்திய பின்னர் இன்றையதினம் (14) வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad