மதல் உடைந்து விழுந்ததில் இராணுவ வீரர் பலி - தியத்தலாவையில் சம்பவம்...!
பதுளை தியத்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராணுவ கல்லூரியில், பழைய மதிலொன்றை உடைப்பதற்கு முயற்சித்த இராணுவ வீரர் ஒருவர் மதில் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பதுளை மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயது இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இராணுவவீரரை தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இது தொடர்பில், தியத்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை