நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை - மின்சார சபையின் பொது முகாமையாளர் வெளியிட்டுள்ள தகவல்!
கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலாலை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த திடீர் மின்தடை குறித்து தனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இது குறித்து நாட்டின் பல பகுதிகளில் இருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை