நாடு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது - ஒத்துக்கொண்டார் அங்கஜன் எம்.பி!
நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (20) சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் முன்னுரிமைகள் தொடர்பான கூட்டத்தில் பங்குபற்றி இருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாடு பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம், கோதுமைமா விலையேற்றம், கொரோனாவின் தாக்கம் ஒரு ஒருபக்கம், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் வெடிப்பு சம்பவங்கள் என நாடு தற்போது மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஒவ்வொருவரும் காலையில் எழுந்த தொடக்கம் என்ன நடக்குமோ தெரியாது என்ற பல்வேறு அச்சத்தின் மத்தியிலேயே நாட்களை நகர்த்துகின்றனர்.
எனவே இதிலிருந்து விடுபடுவதற்கு அனைவரது பங்களிப்பும் மிகமுக்கியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை